உணவை ரசித்து....ருசித்து சாப்பிடவேண்டும்:


1.0 இரு வகை மனிதர்கள்:

இந்த உலகில் இருவகை மனிதர்கள் உள்ளனர். முதல் வகை மனிதர்கள் உயிர் வாழ்வதற்க்காக சாப்பிடுகிறார்கள் இவர்கள் "EAT TO LIVE" என்ற ரகத்தை சேர்ந்தவர்கள். இரண்டாவது வகை மனிதர்கள் சாப்பிடுவதற்க்காகவே உயிர் வாழ்பவர்கள். இவர்கள் "LIVE TO EAT " என்ற ரகத்தைச் சார்ந்தவர்கள். நம்மில் பலர் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் சாப்பிடுகிறோம். விளைவு நாக்கு சுவைக்கு உண்ணுகிறோம். வயிறு சுவைக்கு இவர்கள் உண்பது இல்லை.2.0 உங்களுக்கு சாப்பிடத் தெரியுமா?

தினமும் நான் சாப்பிடுகிறேன். பிறந்தது முதல் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். சாப்பிடாமல் நாம் உயிர் வாழ முடியாது என்று நீங்கள் சொல்லுவது எனக்கு புரிகிறது. என் கேள்வி யாதெனில் சாப்பிடும் போது செய்ய வேண்டிய விசயங்களை நாம் மறந்துவிடுகிறோம்.

உங்களுக்கு எப்படி முறையாக சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?

சார் நான் ஆண்டாண்டு காலமாக உணவு சாப்பிடுகிறேன். என்னைப் பார்த்து இந்த அர்ப்பத்தனமான கேள்வியைக் கேட்டுவிட்டீர்களே ? என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள்.
உண்மையில் நம்மில் 100 பேரில் ஒருவருக்கு கூட எப்படி முறையாக சாப்பிடுவது எப்படி என்று தெரியாது.

அதிசயம், ஆனால், உண்மை !.3.0 மித வேகம் மித நன்று:

மித வேகம் மித நன்று. இது சாலையில் வாகனம் ஓட்டும் போது மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய கருத்து மட்டும் அல்ல. நாம் சாப்பிடும் போதும் மனதில் இறுத்தி வைத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்.

நம்மில் சிலர் வேகமாக சாப்பிடுவார்கள். மற்றும் சிலர் மெதுவாக சாப்பிடுவார்கள். எது சரி?, எது தவறு ? எப்படி சாப்பிட்டாலும் சரி வாயில் போடப்பட்ட உணவு நன்றாக கடிக்கப்பட்டு, மெல்லப்பட்டு, சுவைக்கப்பட்டு, கூழாக்கப்பட்டு, அதன்பின் வயிற்றுக்குள் போக வேண்டும். அதுதான் முக்கியம் அவ்வாறு இல்லாமல் அப்படி அப்படியே வாயில் போட்டு விழுங்க கூடாது..4.0 உமிழ் நீர் - ஆரோக்கிய நீர்:

நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு வாயிலுள்ள உமிழ்நீர் முக்கிய பங்கு ஆற்றுகிறது. நமது மனிதனின் வாயின் இரண்டு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கின்றன.5.0 உமிழ் நீர் சுரப்பிகள்:

நமது வாயில் உள்ள மூன்று உமிழ் நீர் சுரப்பிகளானவை:

1. பரோட்டிட் சுரப்பி
2. சப்மேன்டிபலார் சுரப்பி
3. சப்லிங்குவல் சுரப்பி.

இந்த மூன்று சுரப்பிகளிலுருந்தும் வரும் குழாய்கள் வாயினுள் வந்துதான் திறக்கின்றன.6.0 75% : 20% : 5% உமிழ்நீர்:

பரோட்டிட் சுரப்பிதான் இந்த மூன்று சுரப்பிகளில் மிகப்பெரியது. அடுத்ததாக உள்ள சப்மேன்டின் சுரப்பிதான் 20 சதவீத உமிழ்நீரை சுரக்கிறது. ஐந்து சதவீத உமிழ்நீர், மூன்றாவதாக உள்ள சப்லிங்குவல் சுரப்பியிலிருந்து சுரக்கின்றது.7.0 எச்சில் ஊறுதல்:

உணவை பார்த்தவுடன், உணவை நினைத்தவுடன், உணவின் வாசனையை நுகர்ந்தவுடன், உமிழ்நீர் வாயில் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. உமிழ்நீரில் மியூகஸ், புரோட்டின், தாது உப்புக்கள் மற்றும் அமைலேஸ் என்கிற என்சைம் ஆகியவை இருக்கின்றது.8.0 லிட்டர் கணக்கில் எச்சில்:

ஒரு நாளைக்கு சுமார் 1 லிட்டர் முதல் 2 லிட்டர் உமிழ்நீர் வாயிலிருந்து வயிற்றுக்குள் தள்ளப்படுகிறது.

எல்லா நேரமும் நம்மை அறியாம்லேயே நாம் வாயில் சுரக்கும் உமிழ்நீரை உள்ளே விழுங்கிக் கொண்டடேதான் இருக்கிறோம்.9.0 உமிழ்நீர் என்சைமின் வேலை:

உமிழ்நீரில் உள்ள என்சைம் நாம் சாப்பிடும் உணவில் ரசாயன மாற்றங்களை வேகமாக ஏற்படுத்த உதவி செய்கிறது. இந்த என்சைம் இல்லாவிட்டால் நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆக வாரக்கணக்கில் ஏன் மாதக் கணக்கில்கூட ஆகும்.10.0 உமிழ் நீர் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியம்:

உமிழ்நீர் சரியாக சுரக்கிறது என்றால், உடலிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள் இவையெல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறது என்று பொருள். இவையெல்லாம் வேலை செய்யாவிட்டால் நம்மால் உயிர்வாழ முடியாது.11.0 அமைலேஸ் என்சைமின் வேலை:

உமிழ்நீரிலுள்ள அமைலேஸ் என்கிற நொதி (என்சைம்), நாம் சாப்பிடும் உணவிலுள்ள ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட்டை மால்டோஸ் என்கிற சர்க்கரைப் பொருளாக மாற்றுவதற்க்கு உதவி செய்கிறது.

உணவு சிறுகுடலில் போய்சேரும்போது இன்னும் அதிகமாக அமைலேஸ் என்சைம் கணையத்திலிருந்து சுரக்கப்பட்டு உணவில் மிச்சம் மற்றும் மீதமிருக்கும் ஸ்டார்ஸ்சையும், மால்டோசாக மாற்றிவிடுகிறது.12.0 மால்டோஸ் என்சைமின் வேலை:

மால்டோஸ் என்கிற இன்னொரு என்சைம் எல்லா மால்டோசையும் குளுக்கோசாக மாற்றிவிடுகிறது. இந்த குளுகோஸ் தான் இரத்தத்தில் கடைசியாக கலக்கிறது.13.0 மியூசின் என்சைமின் வேலை:

நமது உமிழ்நீரிலுள்ள 'மியூசின்' என்கிற பொருள் வாய் எப்பொழுதும் ஈரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.14.0 லைசோமின் வேலை:

அதே மாதிரி உமிழ் நீரிலுள்ள 'லைசோம்' என்கிற பொருள் நாம் சாப்பிடும் உணவிலுள்ள கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழித்துவிடுகிறது.15.0 உணவு ஜீரணம்:

வயிற்றுக்குள் போய் எல்லா உணவும் ஜீரணம் ஆகிவிடும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தவறு, உணவு வாயில் போட்டவுடன் உதடு, கன்னம், நாக்கு ஆகியவற்றிலுள்ள தசைகள் ஒன்று சேர்ந்து வாயினுள் போடப்பட்ட உணவை வாயினுள்ளேயே சிறிது நேரம் வைத்துக் கொண்டிருக்கும்படி செய்கிறது.16.0 உணவு துண்டு.....சிறிய துண்டு..........மிகச்சிறிய துண்டு:

உணவு வாய்க்கு வந்து அதே நேரத்தில், வாயிலுள்ள 3 உமிழ்நீர் சுரப்பிகள் சுரக்கும் திரவம் வாயில் போடப்பட்ட உணவுக் கவளத்தைச் சூழ்ந்து செரிமானத்திற்கு தயாராகிறது. பற்களுக்கிடையில் மாட்டிய உணவு துண்டு துண்டாக வெட்டப்படுகிறது. பிறகு வெட்டப்பட்ட உணவு பின்பக்கத்திலுள்ள பற்களால் மிகச்சிறிய துண்டுகளாக ஆக்கப்பட்டு விழுங்குவத்ற்க்கு ஏதுவாக தயாராகிறது. இவ்வளவு செயல்களும் கண் மூடி, கண் திறப்பதற்குள் நிகழ்ந்து விடுகின்றன.17.0 அறு சுவைக்கு ஏற்ற என்சைம்:

அதிசயம், ஆனால் உண்மை !

நாக்கில் உள்ள சுவை நரம்புகள் நாக்கில் வந்து தொடும் உணவானது இனிப்பா, புளிப்பா, உப்பா, துவர்ப்பா என்பதைக் கண்டு பிடித்து அந்த அளவுக்கு தேவையான சரியான என்சைம்களை சுரக்கச் செய்கிறது.18.0 உணவு உருண்டை:

நாக்கு இப்படியும், அப்படியும் புரளும் போது நாக்குக்கு இடையில் உணவுத்துண்டுகள் பாதி நிலையில் ஜீரணமாகி ஒரு உருண்டையாக ஆக்கப்பட்டு நாக்கு மூலமாகவே அந்த உணவு உருண்டை தொண்டைக்குள் தள்ளப்படுகிறது.19.0 வயிற்றுக்குள் என்சைம்:

தொண்டையிலிருந்து வயிற்றுக்குள் இறங்கிய உணவு அங்குள்ள 5 என்சைம்களுடன் சேர்ந்து மேற்கொண்டு ஜீரணமாகி வேலையை ஆரம்பிக்கிறது.20.0 பான், ஜர்தா பீடாவுக்குத் தடா:

வெற்றிலை பாக்கு, புகையிலை, பான், ஜர்தா போன்றவற்றைத் தொடர்ந்து போடும் பழக்கமுள்ளவர்களுக்கு வாயினுள் வந்து முடியும் உமிழ்நீர் சுரப்பிகளின் குழாய் பாதிக்கப்பட்டு அடைபடும் வாய்ப்பு அதிகம். எனவேதான் இத்தகைய பழக்கம் உள்ளவர்களுக்கு சரிவர உமிழ்நீர் சுரக்காமல் அடிக்கடி தொண்டை காய்ந்துவிடுகிறது.21.0 பற்களை பாதுகாக்கவும்:

இதே போல் பற்களை இழந்த ஒருவருக்கு சத்தான சரியான உணவு கிடைக்காது. காரணம் அவரால் நன்றாக மெல்ல முடியாததால் அவர் சாப்பிடும் உணவு சரியான முறையில் ஜீரணம் ஆகாமல் உணவிலுள்ள சத்தான பொருட்கள் உடலுக்குப் போய் சேருவதில்லை. எனவே இவர்களுக்கு தேக ஆரோக்கியமும் குறைந்துவிடும்.
ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும். ஆடி அமர உட்கார்ந்து சாப்பிடனும். சாப்பிடுவதற்க்கு என்று ஒவ்வொரு வேளையும் குறைந்தது 15 முதல் 20 நிமிடம் ஒதுக்குங்கள்.
அமைதியான இடத்தில் அமர்ந்து சாப்பிடுங்கள்.
நன்றாக சாப்பிடுங்கள்.
உணவை நன்கு மென்று சாப்பிருங்கள். உணவை அள்ளிப்போட்டு வயிற்றின் உள்ளே தள்ளுவதற்க்கு மட்டும் தான் வாய் உபயோகப்படுகிறது என்று தவறாக நினைத்து விடாதீர்கள். சாப்பிடும் உணவு ஜீரணம் ஆகும் வேலை வாய்லேயே ஆரம்பித்துவிடுகிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

Popular posts from this blog

உடல் ஆரோக்கியத்திற்க்கு 10 கட்டளைகள்:

சிந்தனை சிற்பி ஓர் அறிமுகம்